திருக்கழுக்குன்றம்:-#முத்திகைநல்லான் குப்பம் முருகன் கோயில்.

 #திருக்கழுக்குன்றம்:-#முத்திகைநல்லான் குப்பம் முருகன் கோயில்.


#திருக்கழுக்குன்றத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது #அருள்மிகு முத்துக்குமாரசாமி மலைக்கோயில்.



#திருக்கழுக்குன்றத்திலிருந்து முத்திகைநல்லான் குப்பம் வழியாகவும்,அம்மணம்பாக்கம் வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம். மலைமீது அமைந்துள்ள முருகன் கோயில் இது. கோயிலின் அடிவாரத்தில் ஶ்ரீதேவிகருமாரியம்மன் கோயில் உள்ளது.

அங்கிருந்து படி ஏறுகையில் மயில் சிற்பம் உள்ளது
: அடிவாரத்திலிருந்து சுமார் 200 படிக்கட்டுக்கள் அமைந்துள்ளது.



மலைக்கு 50 அடி தூரத்தில் தியான மண்டபம் -திருமண மண்டபம் அமைந்துள்ளது.





திருமணம் -காதுகுத்தல் பிற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் சினிமா படபிடிப்பும் அங்கு அடிக்கடி நடைபெறுவதாக சொன்னார்கள்.மலைமீது சென்றதும் வள்ளி தெய்வானையுடன் முருகன் நமக்கு அருள்பாலிக்கின்றார்.




கோயிலினை சுற்றி இயற்கை காட்சி அருமையாக உள்ளது.


தூரத்தில் #வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் தெரிகின்றது.


மலைமீது வாகனத்தில் செல்ல பாதை அமைத்து வருகின்றார்கள்.முருகர் கோயிலுக்கு பின்னால் பெருமாள் கோயிலும் அடிவாரத்திலும் பெரிய குளமும் அமைக்க உள்ளார்களாம்.



வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகனை வேண்டினால் திருமணம் விரைவில் கைகூடுவதாக சொன்னார்கள்.திருத்தணிக்கோ -திருப்பேரூருக்கோ செல்ல முடியாதவர்கள் இங்குள்ள முருகனை சென்று வழிபடலாம். கிருத்திகை -சஷ்டி இங்கு விஷேஷம். நேரம் கிடைக்கும் சமயம் சென்று வாருங்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்